டோக்கியோ: ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயல் காரணமாக, நெடுஞ்சாலையில் சென்ற கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான. சுமார் 130 கார்கள் ஒன்றொடென்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வடக்கு ஜப்பான் மியாகி (Miyagi district) மாகாணத்தில் உள்ள தோஹோகு பகுதியில் ( Tohoku Expressway) இன்று மதிய வேளையில் பனிப்புயல் தாக்கியது. அதிக பட்சமாக 100 கிமீ / மணி (62 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக உள்ளூர் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பனிப்புயலானது அந்த மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையை கடுமையாக தாக்கியது. இதன் காரணமாக, சாலை முழுவதும் பனியால் மூடப்பட்டது.
அப்போது, அந்த வழியாக சென்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள், ஒன்றொடொன்று மோதி விபத்துக்குள்ளனாது. ஒரே இடத்தில் சுமார் 130 கார்கள் மோதி குவியதாக ஒரே இடத்தில் காணப்பட்டது. இந்த வாகனங்களில் சுமார் 200 பேர் வரை பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
உடடினயாக விரைந்து வந்த மீட்பு படையினர், பனியில் சிக்கியவர்களை மீட்டு, அருகே உள்ள பகுதியில் தக்க வைத்தனர். அவர்களுக்கு தேவையான உணவுகள், போர்வைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து குறிய அதிகாரிகள், சமீபத்திய வாரங்களில் ஜப்பான் கடுமையான பனிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது, நாட்டின் சில பகுதிகள் சராசரியாக எதிர்பார்க்கப்படும் பனிப்பொழிவை விட இருமடங்காக காணப்படுகின்றன. இன்று விபத்து நடைபெற்ற நெடுஞ்சாலையில், வாகனங்கள் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. சுமார் 50 கி.மீ (31 மைல்) வேகம் வரையில்தான் இயக்க வேண்டும் என வரம்பு அமல்படுத்தப்பட்டு இருந்ததாகவும், இதனால் சேதம் குறைவு என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பனிப்புயல் காரணமாக, ஜப்பானின் அதிவேக ரயில் நெட்வொர்க்கும் பாதிப்படைந்து உள்ளதாகவும், சில பகுதிகள் பனியால் மூடப்பட்டு உள்ளதால், டோஹோகு பிராந்தியத்தில் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினர். மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் 40cm (15 அங்குலங்கள்) வரை பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் நடப்பாண்டு, இந்த குளிர்காலத்தில் அதிக அளவு பனிப்பொழிவை அனுபவித்து வருகிறது. கடந்த மாதம், கனேட்சு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு நாட்களுக்கு 1,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கித் தவித்தன. வானிலை மிகவும் மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.