சென்னை:  சென்னையைப் போல கோவையை நவீனப்படுத்தி வருகிறது முதலமைச்சர் ஸ்டாலின் அரசு. அதன்படி கோவையில் பிரமாண்டமான கிரிக்கெட் டேடியத்தை அமைக்க உள்ளது. அதற்கான மாதிரி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கோயம்புத்தூரில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்ட தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளது.

தமிழக அரசு கோவையில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிட்டுள்ளது.  இந்த மைதானம் ஐபிஎல் போட்டிகள் உள்பட அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும் வகையில் சர்வதேச தரத்தில்,  இந்தியாவிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும்  வகையில் அமைக்கப்பட உள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் இந்த புதிய கிரிக்கெட் மைதானம் தொடர்பான அறிவிப்பை  வெளியிட்ட நிலையில்,  சமீபத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பிற்கான டெண்டர்களை அழைத்துள்ளது.

கோவையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் சேலம்கொச்சி பகுதிகளை இணைக்கும் பகுதியில் மைதானம் அமைய உள்ளது. இதற்காக அந்த பகுதியில் உள்ள அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக நரேந்திர மோடி ஸ்டேடியம் உள்ளது. ஒரே நேரத்தில் 1,32,000 அமர்ந்து பார்க்கும் இது உலக அளவிலும் பெரிய மைத்தனமாக உள்ளது.  கோவையில் அமைய உள்ள மைதானம், நரேந்திர மோடி ஸ்டேடியத்தை விட பெரிய அளவில் இருக்கும் என்றும், பல அதிநவீன வசதிகளை கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் தெலுங்கானா அரசு ஹைதராபாத் பகுதியில் புதிய மைதானத்தை கட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் மும்பை அரசும் நகருக்கு வெளியில் புதிய மைதானத்தை கட்ட உள்ளது.