பாஜக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்திற்கு பிரம்மாண்ட வடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இந்த பிரம்மாண்ட வடையை தயாரித்துள்ளது.
சென்னை பெரம்பூரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த வடைக்கு ‘மோடி வாயில் சுட்ட வடை’ என்று பெயரிட்டுள்ளனர்.
#Watch | பெரம்பூரில் கடந்த பத்தாண்டுகளாக 'மோடி ஆட்சி வாயில் சுட்ட வடை' என பாஜக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் ஐந்தரை அடியில் வடை செய்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம்!#SunNews | #Perambur | #ElectionsWithSunNews pic.twitter.com/hOOUID4URj
— Sun News (@sunnewstamil) March 26, 2024
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, கருப்பு பணம் மீட்பு, கோவை மெட்ரோ ரயில், ஸ்மார்ட் சிட்டி, விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் என கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த போலி வாக்குறுதிகளை குறிக்கும் வகையில் பலவிதமான வடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]