ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 10 ஆண்டுகள் கழித்து வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
செப்டம்பர் 18, செப் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.
இம்முறை தேசிய மாநாட்டு கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவெடுத்துள்ளது.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமான தொகுதிகள் மற்றும் வெற்றிவாய்ப்பு உள்ள வேட்பாளர்களை அடையாளம் காணும் பணியை துவங்கியுள்ளது.
இதற்காக டெல்லியில் நாளை வேட்பாளர்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.