பிறந்த குழந்தைக்கு பேரு லாக் டவுன்.. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ…
ஊரடங்கு காலத்தில் பிரசவ வலி ஏற்படும் பெண்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள், புருஷன்காரன் – தலைவலி, திருகுவலி உள்ளிட்ட வலிகளை எல்லாம் சுமக்க வேண்டியுள்ளது.
சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘கொரோனா’’, ’கோவிட்’ என்று பெயர் சூட்டி அழகு பார்க்கிறார்கள், பெற்றோர்.
பிரச்சினை இல்லாமல் பிள்ளை பிறந்ததால், கொரோனாவுக்கு நன்றி காணிக்கையாம்.
மத்தியப்பிரதேச மாநிலம் ஷியோபூர் மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மஞ்சு என்ற பெண்ணுக்கு ,அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பையனின் தந்தை ரகுநாத்தை அழைத்த நர்ஸ்’ பிறப்பு சான்றிதழை ரெடி செய்ய வேண்டும். குழந்தைக்கு என்ன பெயர் வைப்பதாக உத்தேசம்?’ என்று கேட்டுள்ளார்.
ரகுநாத் கொஞ்சமும் தயங்காமல்’ லாக்டவுன்’’ ( ஊரடங்கு) என்று சொல்லி அதிர வைத்துள்ளார்.
நர்சும், உடன் இருந்த சக பணியாளர்களும் விக்கித்து போனார்கள்.
‘’ உறுதியாகத்தான் சொல்கிறீர்களா?’’ திரும்பவும் நர்ஸ் கேட்டார்.
‘’ இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் யாருக்கும் பிரச்சினை கொடுக்காமல் என் பையன் பிறந்துள்ளான். அவனுக்குப் பெயர் ‘லாக்டவுன் ‘தான். மாற்றமில்லை’’ என்று அழுத்தம் திருத்தமாக இப்போது கூறியது யார் தெரியுமா?
பையனின் அம்மா, மஞ்சு.
– ஏழுமலை வெங்கடேசன்