கொரோனா ஊரடங்கால், பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் கஷ்டம் சொல்லி மாளாது. அவர்கள் படும் வேதனை மற்றும் நடந்தே தங்களது ஊர்களுக்கு செல்லும் வீடியோக்கள் வெளியாக மக்களின் மனதை கரைத்து வருகிறது…
இந்த நிலையில், மத்தியபிரதேசம், இந்தூர் பைபாஸ் சாலை பகுதியில், புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்தினருடன் தனக்க சொந்தமான மாட்டு வண்டியில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
ஆனால், துரதிருஷ்டவசமாக அவரது ஜோடி மாடுகளில் ஒன்று வழியில் இறந்ததால், சோகமடைந்த அந்த தொழிலாளி, இறந்த மாட்டை அங்கே அடக்கம் செய்துவிட்டு, இருக்கும் ஒற்றை மாட்டுக்கு இணையாக மற்றொரு புறம் தானே மாடாக மாறி, குடும்ப பாரத்தை ஏற்றிய வண்டியை குடும்பத்தலைவன் இழுத்துச் செல்லும் காட்சி வீடியோ வைரலாகி வருகிறது…
பார்ப்போரின் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது…