ஐதராபாத்

கார்ட்டுன் ஷோ ஒன்றைப் பார்த்து அது போல தனக்குத்தானே தீ மூட்டி விளையாடிய ஒரு 12 வயது சிறுவன் மருத்துவமனையி மரணம் அடைந்தான்

ஜெய்தீப் என்னும் சிறுவன் பாலாபூரில் வசித்து வந்தவன்.  இவன் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறான்.  எப்போதும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளையே பார்த்துக் கொண்டிருப்பான்.  சம்பவத்தன்று, முதியவர்கள் இருவரும் வேலையாக இருந்த போது, மாடிக்கு தனியாக ஜெய்தீப் சென்றிருக்கிறான்.  செல்வதற்கு முன் தாத்தாவிடம், தான் கார்ட்டூனில் வருவதைப் போல விளயாடப் போவதாக சொல்லி விட்டு சென்றிருக்கிறான் திடீரென அவனுடைய அலறலைக் கேட்டு மாடிக்கு ஓடிய இருவரும் அவன் தீக்காயங்களுடன் தீயின் இடையில் இருப்பதைக் கண்டு பதறிப் போனார்கள்.

இரவு சுமார் 10.30 மணிவாக்கில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது,   தீயை உடனடியாக அணைத்த அவனது தாத்தா அவனை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்திருக்கிறார்.  பிறகு ஆஸ்மானியா ஜெனரல் ஆசுபத்திரிக்கு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டான்  அங்கு அவன் சிகிச்சை பலனின்றி உயர் இழந்தான்,

சந்தேகத்துக்குரிய மரணம் எனும் பிரிவில் இந்த நிகழ்வு பதியப்பட்டுள்ளது

இதை பற்றி குழந்தைகள் நல ஆய்வாளர் அச்சுத ராவ் கூறுகையில் இது போன்ற நிகழ்வுகளுக்கு பெற்றோர் மட்டும் அல்ல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்களும் பொறுப்பேற்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்.  மேலும், இது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டு தாங்களும் அது போல ஸ்டண்ட் செய்யும் ஆர்வம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுப்பது பெற்றோர் கடமை என்றும்,  இது போன்ற ஸ்டண்டுகள் உண்மையானவை அல்ல என விளக்க வேண்டியது நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களின் கடமை என்றும் கூறியுள்ளார்

இதே போல சென்ற நவம்பர் மாதம் யூ ட்யூப் வீடியோ ஒன்றை பார்த்த கரீம்நகரை சேர்ந்த சிறுவன், கெரோசினை நெருப்பில் ஊதி சாகசம் புரிந்த போது தீப்பிடித்து மரணம் அடைந்தான்

இது போன்ற ஷோக்கள் இன்னும் எத்தனை குழந்தைகளின் உயிரைக் குடிக்கப் போகிறதோ தெரியவில்லை