பாக்தாத்:

ராக் நாட்டில் ஐஸ்கிரிம் பார்லர் ஒன்றில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்  நடத்திய கார் குண்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 40 பேர் இறந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ள தாகவும் தகவல் தெரிவிக்கிறது.

தற்போது உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஈராக்கில் கடந்த சில ஆண்டுகளாக ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும், ஈராக் ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, ஐ.எஸ் அமைப்பினர் கைப்பற்றி இருந்த பழமையான மொசூல் நகரை ஈராக் ராணுவம் சமீபத்தில் மீட்டது.

அதைத்தொடர்ந்து பயங்கரவாதிகள் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பாக்தாத் நகரில் உள்ள  ஐஸ்கிரீம் பார்லர் அருகே வெடிகுண்டுகள் நிரம்பிய காரை நிறுத்தி வெடிக்க செய்துள்ளனர்.

இந்த கொடூர வெடிகுண்டு விபத்தில்  17 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், 32 பேர் படுகாயங்களுடன்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் ஷவாகா என்ற மற்றொரு பகுதியில் உள்ள அரசு அலுவலகம் அருகே நடைபெற்றது.

இந்த கோர தாக்குதலில் 19 பேர் பலியாகினர் மற்றும் 39 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த இரு தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.