வாஷிங்டன்

கிரிப்டோ கரன்சி மதிப்பு குறைவால் பிட் காயின் வர்ததகர் ஒருவர் 24 மணி நேரத்தில் 2.5 பில்லியன் டாலர் இழந்துள்ளார்.

கிரிப்டோ கரன்சி வர்த்தகம் உலகெங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும் என்னும் அச்சத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தனியார் கிரிப்டோ நாணயங்களைத் தடை செய்யும் மசோதா இந்த நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.

இந்நிலையில் பல நாடுகளில் கிரிப்டோ கரன்சிகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.  அவ்வகையில் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு கடந்த சனிக்கிழமை அன்று 16.5% சரிந்துள்ளது.   கிரிப்டோ கரன்சிகளில் ஒன்றான பிட் காயின் வர்த்தகர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை 288,000 பிட் காயின்களை வைத்திருந்தார்.  சனிக்கிழமை பிட் காயினின் மதிப்பு கட கட என சரிந்தது.

இதனால் அந்த வர்த்தகர் ஒரே நாளில் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளார்.   அதாவது வெள்ளிக்கிழமை இவர் 16.29 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிட் காயினை வைத்திருந்தார்.  ஆனால் சனிக்கிழமை இதன் மதிப்பு வெகுவாக குறைந்தது.   எனவே மதியம் அந்த பிட் காயின் மதிப்பு 15.45 பில்லியன் டாலராகக் குறைந்து சனிக்கிழமை இறுதியில் 13.81 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.