மெல்போர்ன்:

றைந்த 11மாத குழந்தையின் புகைப்படத்துக்காக திருடப்பட்ட தனது மொபைலை திருப்பித்தரும்படி மெல்போர்னை சேர்ந்த தம்பதியினர் சமூக வலைதளம் மூலம் மன்றாடி வேண்டி வருகின்றனர். இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனது 11மாத குழந்தையின் புகைப்படங்கள் பதியப்பட்ட மொபைல் போன் திருடு போன நிலையில், அதை தன்னிடம் திருப்பி தரும்படி, குழந்தையின் பெற்றோர் சமுக வலைதளங்களில் உருக்கமாக வேண்டிக் கொண்டுள்ளனர். மெல்போர்ன் பகுதியை சேர்ந்தவர்கள் ஜே, டீ தம்பதியினர். இவர்களின் 11மாத குழந்தை பெயர் அமியா. இந்த குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த குழந்தையுடன் அவர்களின் பெற்றோர் எடுத்திருந்த விலைமதிக்க முடியாத ஏராளமான புகைப்படங்கள் அவர்களின் மொபைலில் இருந்தது. இந்த நிலையில், சமீபத்தில், அந்த மொபைல் போன் திருடுபோனது.

இதனால் சோகமடைந்த ஜே, தனது திருடப்பட்ட மொபைல்போனை கண்டுபிடித்து தரும்படி, சமூக வலைதளங்க ளின் மூலம்  பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் குழந்தை அமியா சிகிச்சை பலனின்றி இறந்தாள். அதையும் தனது முகநூல் பக்கத்தில் கடந்த புதன்கிழமை பிற்பகல் அஞ்சலி செலுத்தும் வகையில் சோகமுடன் பகிர்ந்தார்.

அத்துடன், அமீயா  பிறந்தது முதல்  நரம்பியல் நரம்பியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தனது நோய்க்கு  எதிராக கடினமாக  போராடினார்  என்றும், “அவளுடைய வலிமை, தைரியம், அவளுடைய சகிப்புத் தன்மை ஆகியவை அவளுடைய முதல் சுவாசத்திலிருந்து அவளது கடைசி வரைக்கும்  தென்பட்டதாகவும்,  “அமியாவின்  கடைசி மணிநேரம் அமைதியாகவும் அமைதியுடனும் கழிந்தது, அம்மா மற்றும் அப்பாவின் கைகளில் அவரது உயிரி பிரிந்தது”, என்று மிகுந்த சோகத்துடன்  தெரிவித்திருந்தார்.

அவர்களின் சோகமான பதிவு குறித்து வலைதள பயனர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.  பலரும் பல்வேறு விதமாக பதிவிட்டிருந்தனர். பலர் அவர்களின் மொபைலை திருடியவர்கள் திருப்பி கொடுத்துவிடும்படி ஏராளமானோர்  பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் அமியாவின் பெற்றோருக்கு முகவரியில்லாத ஒரு நம்பரில் இருந்து போன் வந்தது.

அதில் பேசியவர், ஜே  மற்றும்  டீ தம்பதியின், சாம்சங் கேலக்ஸி எஸ்8 என்ற ஊதாநிற தொலைபேசியைப் பற்றிய தகவலுடன்,  ‘தொலைபேசி, மற்றும் அதிலுள்ள சிறுமி அமியாவின் என்ற விலைமதிப்பற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு  பற்றி சாட்ஸ்டோன் ஷாப்பிங் மையத்தில் உள்ள கழிப்பறையில் போடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அவரிடம் அவர்கள் வேறு எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை. ஆனாலும்,  அவர்களது மொபைல் கிடைக்க வில்லை. இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில்  டீ தனது சோசியல் மீடியா பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ஏற்கனவே பல பதிவுகள் இருந்தபோதிலும் தொலைபேசியை இன்னும் மீட்கப்படவில்லை என்றும்,  அதைத் தேடிக்கொண்டிருக்கிறேன், என்று பதிவிட்டிருந்தார். தொலைபேசியை எடுத்தவர்கள் அதை திருப்பி கொடுத்து விடும்படியும், அவர்களுக்கு  பணத்திற்காக அதை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் உருக்கமுடன் கோரியிருந்தார். இந்த மொபைலில் உள்ள படங்கள்  எங்களுக்கு பணத்தை விட அதிக மதிப்புமிக்க  என்பதை புரிந்து கொள்ளுங்கள்,” என்று அவர் எழுதினார்.

மேலும், அந்த மொபைலில் உள்ள தனது மகள் அமியாவின்  புகைப்படங்களை மீட்டெடுக்க பல வழிகளை நாங்கள் முயற்சித்திருக்கிறோம், ஆனால் எதுவும் வேலை செய்யவில்லை என்றும்,  தங்களது தொலைபேசியை, அமியா சிகிச்சை பெற்ற   மோனஷ் குழந்தைகள் மருத்துவமனையில்  விட்டுவிடுங்கள் அல்லது அதை சாட்ஸ்டனில் ஒரு உதவி மையத்தில் விட்டுவிடுங்கள்  என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அத்துடன்  தங்களது மொபைலை யாரோ ஒருவர் எடுத்திருப்பது தெரிகிறது,  தயவுசெய்து தயவுசெய்து திரும்பி கொடுங்கள் என்று டீ மீண்டும் மீண்டும் கெஞ்சியிருந்தார்.

தற்போது இந்த தம்பதியினர், தங்களது தொலைபேசிய கண்டுபிடிக்க விக்டோரியா பொலிஸைத்  தொடர்பு கொண்டு நடவடிககை எடுக்க புகார் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜே, டீ தம்பதியினர், அமியாவின் அனைத்து படங்களும் அந்த மொபைலில்தான் இருக்கிறது என்றும், “நாங்கள் இன்னொரு தொலைபேசியைப் பெறலாம், ஆனால் அது, மொபைல்  பற்றி அல்ல. அதனுள் உள்ள விலைமதிக்க முடியாத தங்களது செல்ல மக்ள்  படங்களையும் பற்றியது என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.

தங்களது தொலைபேசியை எடுத்தவர்கள், அதனுள் உள்ள போட்டோக்களை அழித்துவிட வேண்டாம் என்றும்,  கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

மேலும், தங்களது குழந்தை அமியா, பிறந்தது முதல் அவளுக்கு சிறப்பு மருத்துவ பாதுகாப்பு வழங்கப்பட்டதாக/வம்,  அவர் பிறந்து 330 நாட்கள் ஆன நிலையில், சுமார் 200 நாட்கள் மருத்துவமனையில்தான் கழித்தார் என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

“உங்களுக்கு  பணம் தேவைப்பட்டால், நாங்கள் தொலைபேசியைத் திருப்பிச் செலுத்துவதற்காக உங்களை மகிழ்ச்சி படுத்துவோம் என்றும், தொலைபேசியை எடுத்தவர்கள்,  தங்களை சந்திக்க விரும்பினால், மகிழ்ச்சி அடைவோம் என்றவர்கள், அந்த தொலைபேசியிலிருந்து புகைப்படங்களை நாங்கள் நகலெடுக்கிறோம், நீங்கள் தொலைபேசியை வைத்திருக்கலாம், என்றும் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

தங்களது 11 மாத குழந்தையின் நினைவாக ஜே,  டீ தம்பதியினர் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்  பேஸ்புக் பயனர்களின்  மனதை உருக செய்துள்ளது.