அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 44 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
1980ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 1 ஆண் மற்றும் 2 பெண் என 3 வாரிசுகள் உள்ளனர்.
இவர்களுக்கு இடையே 2006ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து கேட்டு அதே ஆண்டு மே மாதம் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு 2013ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
சமரச மைய்யத்திற்கு சென்ற இந்த வழக்கில் 26 ஆண்டுகள் சேர்ந்து வாழந்த தம்பதிகள் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை.
இதையடுத்து மனைவிக்கு ரூ. 3.07 கோடி ஜீவனாம்சம் வழங்க கணவருக்கு உத்தரவிடப்பட்டது.
தற்போது 78 வயதாகும் கணவர் தன்னிடம் இருந்த 2.16 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் ரொக்கம் தங்கம் ஆகியவற்றை தனது 73 வயது மனைவிக்கு கொடுத்ததை அடுத்து இவர்களது 44 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.