டெல்லி:
கொரோனா கால பொதுமுடக்கத்தில் காலத்தில், சுமார் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்களை டெலிவரி செய்துள்ள பிரபல உணவு சேவை நிறுவனமான சுவிக்கி தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் 25ந்தேதி முதல் 6 கட்டமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இடையே கடந்த மே முதல் சில பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு  வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் ஓட்டல்கள் திறக்க அனுமதி வழங்கியதுடன், உணவு பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், வீட்டிலேயே முடங்கி உள்ள பலர், சுவிக்கி, ஷோமட்டோ போன்ற உணவு சேவை நிறுவனங்கள் மூலம் தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சுவிக்கி நிறுவனம், பொதுமுடக்கம் காலத்தில் தங்களின் சேவை குறித்த தகவலை வெளியிட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்கள் பதிவு செய்யப்பட்டு, அவைகள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டு உள்ளது.
தினமும் 65 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இரவு 8 மணி உணவு பொட்டலத்தை பதிவு செய்திருக்கின்றார்கள்.
1 லட்சத்து 29 ஆயிரம் சாக்கோ லாவா கேக்,
1 லட்சத்து 20 ஆயிரம் பிறந்தநாள் கேக்,
73 ஆயிரம் கிருமிநாசினி குப்பிகள்,
47 ஆயிரம் முகக் கவசங்கள்,
3 லட்சத்து 50 ஆயிரம் நூடுல்ஸ் பொட்டலங்கள்
32.3 கோடி கிலோ அளவுள்ள வெங்காயம், 5.6 கோடி கிலோ அளவில் வாழைப்பழம் உள்பட பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர்.
உள்பட ஏராளமான பொருட்களை பொதுமக்களுக்கு டெலிவரி சுவிக்கி சேவை செய்து, மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது என்று தெரிவித்து உள்ளது.