டில்லி

கொரோனா தாக்கம் காரணமாக இந்திய வாடிக்கையாளர்களில் 78% பேர் தங்கள் செலவைக் குறைத்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.  இதனால் பொருளாதாரத்தில் கடும்  சரிவு ஏற்பட்டுள்ளது.  மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது.  இதன் தாக்கம் குறித்து ஒரு தனியர் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த ஆய்வு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள 2376 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 18 முதல் ஜூன் 7 வரை நடந்த இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியாகி உள்ளன.  அந்த ஆய்வு முடிவில், “இந்திய வாடிக்கையாளர்களில் 78% பேர் தங்கள் செலவைப் பெருமளவு குறைத்துள்ளனர்.  இதில் முதல் கட்ட நகரங்களை விட இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரவாசிகள் அதிக அளவில் உள்ளனர்.   இரண்டாம் கட்ட நகரங்களில் 22%  மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் 30% பேர் தங்கள் செல்விகளைக் குறைக்காமல் உள்ளனர்.

இன்னும் மூன்று மாதங்களில் 49% பேர் ரூ. 5000 வரை மட்டுமே செலவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.    இது மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வைக் காட்டுகிறது.  மேலும் கொரோனா பரவுதல் அதிகரித்துள்ளதால் ஆன்லைன் வர்த்தகம் 1.6 மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிக ஆதாயம் தரக்கூடிய இணைய தளங்களையே பெரும்பாலானோர் விரும்பி உள்ளனர்.” எனத் தெரிய வந்துள்ளது.