சென்னை:
தமிழகத்தில் திரையரங்குகளை தற்போதைய நிலையில் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக திரையுரங்குகள், கேளிக்கை விடுதிகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டன. கடந்த மார்ச் 16-ம் தேதி முதலே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இதனால், புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல், திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என திரைத்துறையினர் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. தற்போது சில படங்கள் ஓபிடி எனப்படும் இணையதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
தற்போது ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்காக சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தி ருந்தாலும் திரையரங்குகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கிடையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை என்றவர், வெளிநாடுகளைப் போன்று இடைவெளி விட்டு படம் பார்க்க அனுமதி அளித்தால், அதனால் தியேட்டர் உரிமையாளருக்கு லாபம் கிடைக்காது என்றும், கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.