
நடிகை வனிதா விஜயகுமார் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை கடந்த 27-ம் தேதி மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்
இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகாரளித்தார்.
இதில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர், கஸ்தூரி , சூர்யாதேவி உள்ளிட்டோர் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் வனிதாவுக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் காரசாரமாக விவாதங்கள் ஓடி கொண்டிருந்தது .
இந்நிலையில் தற்போது ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்ளார் வனிதா விஜயகுமார்.

“ட்விட்டர் முழுக்க போலியான மனிதர்களாக இருக்கிறார்கள். மிகவும் குறைவான அளவில் மட்டுமே நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலான திரைபிரபலங்கள் தன்னை நேர்மையானவர்களாக காட்டிக் கொள்ள தந்திரமாக செயல்படுகிறார்கள்.
எதிர்மறையான ஹேஷ்டேக்குகளை உருவாக்குவது நமது கலாச்சாரமோ பண்பாடோ அல்ல. போலியான நாடகங்கள் மற்றும் அருவருக்கத்தக்க ட்ரெண்டிங்கினால் நான் அப்செட்டாக இருக்கிறேன் என கூறியுள்ளார் .
Patrikai.com official YouTube Channel