ஐதராபாத்: ஆந்திராவில் 24 மணிநேரத்தில் 4,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அந்த அறிவிப்பில் மேலும் இடம்பெற்றுள்ளதாவது: மாநிலம் முழுவதும் 24 மணிநேரத்தில் 4,944 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,668 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 62 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது வரை கொரோனா பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 758 ஆக அதிகரித்துள்ளது.
32,336 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 25,574 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.