மதுரை:
கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு நடத்த 15,000 ரூபாய் கேட்பதா? என நீதிபதிகள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.  மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ளதா என கண்டறியும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் காலதாதம் ஏற்படுவது ஏன் என்று விரிவான அறிக்கை அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து மதுரையில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா பரிசோதனையான பிசிஆர் சோதனை முடிவுகளை வெளியாவதில் தாமதம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
இந்த நிலையில், பிசிஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் 4 நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்படுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு  நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. அப்போது, தமிழகஅரசுக்கு பல்வேறு கேள்விகளை எபப்பியது
மதுரையில் பிசிஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட காரணம் என்ன?
மருத்துவ பணியாளர்களுக்கு போதுமான முழு கவச உடை கையிருப்பில் உள்ளதா? என்று  கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், மதுரையில் இதுவரை 1,07, 162 பரிசோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும், அரசு மருத்துவமனைகளில் உள்ள 1,461 படுக்கைகளில் 738 படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுகிட்ட நீதிபதிகள், கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் இதய நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க மறுப்பது ஏன்? என்று வினவியதுடன்,  கொரோனா சோதனை முடிவு வந்தபிறகுதான் சிகிச்சை தரப்படும் என்று கூறினால் நோயாளியின் நிலைமை என்னாவது என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து,  கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு நடத்த 15,000 ரூபாய் வரை பணம் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது, அது ஏன் என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து பதில் அளித்த அரசு வழக்கறிஞர், கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிசடங்கு நடத்த பணம் கேட்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மதுரை அரசு மருத்துவ கல்லூரி டீன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி உள்ளிட்டோர் உரிய ஆதாரங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.