சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், டாஸ்மாக் கடைகள் மாலை 4 ம வரை மட்டுமே செயல்பட வேண்டும் என என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுஉள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. பலியும் 2,551ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், 1,21,776 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
சமீக நாட்களாக தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதை தடுக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களும் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில், தஞ்சாவூர் மவாட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் டாஸ்மாக் உட்பட அனைத்து கடைகளும் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும் ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
இதே போல மற்ற மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.