வேலூர்:
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி சிறையில் தற்கொலை செய்ய முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி பலமுறை சிறை நிர்வாகிகளிடமும் கோரிக்கை விடுத்த வந்த நிலையில், திடீரென வேலூர் சிறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 29 ஆண்டு களாக சிறையில் வாடுபவர்களில் நளினியும் ஒருவர். இவர் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகஅரசு உள்பட பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தும், மத்தியஅரசு அதற்கு அனுமதி மறுத்து வருகிறது.
இந்த நிலையில், நளினி (Nalini) சிறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள மற்ற சிறை கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, முனமுடைந்த நளினி தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதை காவலர் ஒருவர் பார்த்துவிட்டதால், அவரது தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
நளினிக்கு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பாதுகாப்பு இல்லை என்ற நளினி மற்றும் அவரது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel