கொரோனா ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள், தற்போது ஆன்லைன் கல்வி மூலம் கல்வியை போதிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமே பெறவும், ஆன்லைன் மூலமே மாணவர் சேர்க்கையையும் நடத்தமுடிவு செய்துள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று மாலை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்குகிகறது.
இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகம் இலவச கல்வி தொடர்பாக சில அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது.
ஏழை, எளிய மாணவர்கள் இலவசக் கல்விக்கு விண்ணப்பிக்கலாம் .
விண்ணப்பிக்கும் மாணவர்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
இலவச கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் .
இலவசக் கல்வி பெற விரும்பும் மாணவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளது.