சென்னை:
மிழகத்தில் தொழில் தொடங்க ரூ.10,399 கோடி மதிப்புள்ள 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் தலைமைச்செயலகத்தில் கையெழுத்தாகின.

கொரோனா தாக்கம் காரணமாக உலக பொருளாதாரமே முடங்கி உள்ள நிலையில்,பல்வேறு நிறுவனங்கள் மாற்று இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன. அதுபோன்ற நிறுவனங் களை தங்களது பகுதியில் தொழில்தொடங்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில், அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, தொழில்நிறுவனங்களை தமிழகஅரசு ஈர்த்து வருகிறது.
அதன்படி,  தமிழக தொழில் துறை சார்பில் ரூ.10,399 கோடி மதிப்புள்ள 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் தலைமை செயலகத்தில் கையெழுத்தாகியுள்ளது.
அதில் 5 திட்டங்கள் நேரடியாகவும், எஞ்சியுள்ள 3 திட்டங்கள் காணொலி காட்சி மூலமாக முதல்வர் கையெழுத்திட்டார்.
இதன்மூலம் 13,507 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணை யில் தெரிவித்தது.