ஏழைக் குடும்பத்தை விடாது துரத்திய கொரோனா..
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டையை சேர்ந்த லட்சவா என்ற பெண் கொரோனா தொற்றுக்கு சில நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்தார்.
பலன் இன்றி கடந்த 15 ஆம் தேதி அவர் உயிர் இழந்தார்.
இதனால் சோகத்தில் இருந்த அந்த குடும்பத்தில் மீண்டும் ஒரு துக்க நிகழ்வு.
அவரது மகன் சீனிவாசனுக்குக் கடந்த வெள்ளிக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
108 ஆம்புலன்சுக்கு, சீனிவாசனின் உறவினர்கள் போன் செய்து காத்திருந்தனர்.
ரொம்ப நேரமாக வரவில்லை.
மீண்டும் போன் செய்த போது’’ கொரோனா நோயாளிகளை மட்டுமே இந்த ஆம்புலன்ஸ் ஏற்றி வரும் ‘’ என்று சொல்லியுள்ளனர்.
அரசியல் பிரமுகர் ஒருவர் தலையீட்டின் பேரில் அந்த அம்புலன்ஸ் ஒருவழியாக வந்து சேர்ந்தது. ஆனால் அதற்குள் சீனிவாசன் இறந்து போய் விட்டார்.
என்றாலும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று விட்டு சீனிவாசன் சடலத்துடன் மீண்டும் ஊருக்கு வந்துள்ளது, சீனிவாசன் குடும்பம்.
ஆனால் அவர்களைக் கிராமத்துக்குள் அனுமதிக்க ஊர் மக்கள் மறுத்து விட்டனர்.
‘’கொரோனா தொற்று இல்லை என்று டாக்டர்கள் சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே ஊருக்குள் விடுவோம்’’ எனக்கூறி ,சடலத்துடன் சீனிவாசன் குடும்பத்தை வேனுடன் திருப்பி அனுப்பி உள்ளனர், ஜனங்கள்.
-பா.பாரதி