டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,77,864 ஆக உயர்ந்து 26,285 பேர் மரணம் அடைந்துள்ளனர்
நேற்று இந்தியாவில் 37,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 10,77,864 ஆகி உள்ளது. நேற்று 543 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 26,828 ஆகி உள்ளது. நேற்று 23,552 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,77,630 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,73,007 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 8,348 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,00,937 ஆகி உள்ளது நேற்று 144 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,596 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,306 பேர் குணமடைந்து மொத்தம் 1,65,663 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,807 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,65,714 ஆகி உள்ளது இதில் நேற்று 88 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,049 பேர் குணமடைந்து மொத்தம் 1,13,856 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1,475 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,21,582 ஆகி உள்ளது இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,597 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,973 பேர் குணமடைந்து மொத்தம் 1,01,274 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,537 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 59,652 ஆகி உள்ளது இதில் நேற்று 93 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 1245 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1018 பேர் குணமடைந்து மொத்தம் 21,776 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 960 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 47,476 ஆகி உள்ளது இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,126 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1061 பேர் குணமடைந்து மொத்தம் 34,005 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.