கொரோனா ஊரடங்கு, வருமானம் இல்லாமல் திண்டாடும் நிலை, வேலை இழப்பு என பல சிக்கலில் மக்கள் திண்டாடி வரும் இந்நிலையில் சில திசை திருப்பும் நாடகங்கள் அரங்கேற்றப்படு வதாக பரவாலாக பேச்சு எழுந்துள்ளது.
கருப்பர் கூட்டம் என்ற பெயரில் சில தினங்களுக்கு முன் கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியானது. இதற்கு பல தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளி யாகி இருக்கிறது

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக கமல்ஹாசன் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில் பிரித்தாளும் சூழ்ச்சி நடப்ப தாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
மெசேஜில் அவர் கூறியிருப்பதாவது:
தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.
இவ்வாறு கமல்கூறி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel