சென்னை:
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகள், பழங்குடியினர், தெருக்கூத்து கலைஞர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், அதற்கான நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கடந்த ஜூன் மாதம் 19ந்தேதி முதல் 30 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அப்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் உள்ள திருநங்கைகள், பழங்குடியினர், தெருக்கூத்து கலைஞர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட வாரியத்தில் திவு செய்த தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதையடுத்த குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் உள்ள 501 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்க 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடும், 1,666 திருநங்கைகளுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் 16 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் தூய்மைப்பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க 28 லட்ச ரூபாயும், பழங்குடியின மக்களுக்கு 6 லட்ச ரூபாயும் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel