டெல்லி:
இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 34,956 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக அதிகரித்தது.
கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கையும் 25,602 -ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இன்று காலை (17ந்தேதி )வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 10,3,832 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் நேற்று ஒரே நாளில் 687 போ உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 25,602-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், கொரோனா தொற்று காரணமாக 3,42,473 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 6,35,757 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
.தேசிய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை2,84,281 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,194 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 1,56,369 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,236 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் தில்லியில் 1,18,645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு இதுவரை 3,545 பேர் பலியாகியுள்ளனர்.