வாஷிங்டன்: சீன நாட்டைச் சேர்ந்த ஹுவே போன்ற சில தொழில்நுட்ப நிறுவனங்களின் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது அமெரிக்க அரசு.
மனித உரிமை மீறல் நடைபெறும் பகுதிகளுக்கு உபகரண சப்ளை பணியை, ஹுவே உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
சீன அரசின் மேல், மனித உரிமைகளுக்கு எதிரான தடுப்புக் காவல், மத சுதந்திரம் நசுக்கப்படுதல் மற்றும் உய்குர் முஸ்லீம்களுக்கு கட்டாய கருத்தடை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில், உய்குர் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் தனித்துவத்தை கரைத்து, ஒற்றைச் சீன அடையாளத்திற்குள் கொண்டுவரும் வகையில், உய்குர் முஸ்லீம்கள் மீது பல மனிதஉரிமை மீறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளின் அடிப்படையில்தான், அமெரிக்க அரசு, குறிப்பிட்ட அதிகாரிகளின் மீது விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், சீன அரசின் 3 மூத்த அதிகாரிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]