சென்னை:
ந்தியாவிலேயே ஆன்லைன் மருத்துவ ஆலோசனை சேவையில் தமிழகம் முதலிடத்தில் இருப்ப தாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சந்தேகங்களுக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு இ-சஞ்சிவினி என பெயரிடப்பட்டு உள்ள இந்த  திட்டத்தின்படி இணையதளம் மூலம் யாரும் ஆலோசனை பெறலாம்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,  இ-சஞ்சீவினி ஓ.பி.டி. திட்டத்தின் மூலம் நாட்டிலேயே அதிகம் பேர் பலன் அடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்று இருப்பதாகவும், இதுவரை  6,471 பேர் பயனடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் 374 கர்ப்பிணிகள் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்றும் கூறினார்.