பாட்னா:
பீகார் கவர்னர் மாளிகை இல்லத்தில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பீகார் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு ஜூலை 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில், 12, 284 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை 174 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 6261 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதைய நிலையில்12,849 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
இந்த நிலையில், பீகார் கவர்னர் பாகு சவுகான் மாளிகையில் பணியாற்றிய சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டது.
சோதனை முடிவில் கவர்னர் மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கவர்னர் மாளிகை கருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.