சென்னை:
தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு தொற்று பரவல் உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பாதிப்பு எண்ணிக்கை தினசரி 4 ஆயிரத்தை தாண்டியே பதிவாகி வருகிறது.
இன்று ஒரேநாளில் மேலும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,47,324ஆக உயர்ந்துள்ளது.
இதில் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்குள் வந்த 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது அதிகபட்சமாக சென்னையில் 1,078 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 67 பேர் (அரசு மருத்துவமனை -50, தனியார் மருத்துவமனை -17) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.
இன்று இறந்தவர்களுள் 65 பேர் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்களாவர். 2 பேர் இணை நோய்கள் அற்றவர்களாவர்.
அதேசமயம் இன்று 4,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 97,310 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 41,357 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 16,95,365 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்று மட்டும் 41 ஆயிரத்து 357 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 16 லட்சத்து 95 ஆயிரத்து 365 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இன்று மட்டும் 39 ஆயிரத்து 776 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை 16 லட்சத்து 25 ஆயிரத்து 558 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகம் முழுவதும் 47 ஆயிரத்து 912 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு சார்பாக 53 மற்றும் தனியார் சார்பாக 53 என 106 கரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன”.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.