தேனி:
தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் உச்சம் பெற்ற நலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் வருகின்ற 22 ஆம் தேதி வரை 8 நாட்கள் முழு கடையடைப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி 134 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பரவும் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் ஒன்றிணைந்து கடைகளை அடைப்பது என முடிவு எடுத்துள்ளனர்.
தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கம், மாவட்ட மொத்தம் மற்றும் சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கம், மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி மொத்த வணிகர்கள் சங்கம், மாவட்ட உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், வைகை பருப்பு வியாபாரிகள் சங்கம், தேனி நகர ஓட்டல்கள் சங்கம், தேனி நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய சங்க நிர்வாகிகள் சேர்ந்து, கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவுன்படி, வரும் 22ந்தேதி இன்று முதல் 22ந்தேதி வரை 8 நாட்கள் முழு கடை அடைப்பு நடத்துவதாக அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளனர்.