மிழில் மோஷன் அனிமேஷன் படமாக உருவான கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோனே . காக்டெயில் இந்தி பட 8 ஆண்டு ஆனதின் மகிழ்ச்சியை கொண்டாடினார்.
கடந்த 2012ம் ஆண்டு சயீப் அலிகான், டயானா பென்டியுடன் இணைந்து தீபிகா நடித்த படம் காக்டெய்ல். அதன் 8 ஆண்டு நிறைவை கொண்டாடிய தீபிகா இன்ஸ்டாகிராம் பக்கத் தில் வீடியோ வெளியிட்டார். ஷூட்டிங்கின் போது நடிக்கும் நேரம்தவிர மற்ற நேரங்களில் ஜாலியாக அரட்டை அடித்தபடி அவர்கள் அடிக்கும் அரட்டை குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.
இதுபற்றி தீபிகா குறிப்பிடும்போது, ’நீங்கள் உயிர்ப்புடன் இருந்த தருணம் ஏதாவது உள்ளதா என்றால் அதற்கு காக்டெயில் படத்தில் நடித்த அனுபவம்தான் சரியான பதில் ” என தெரிவித்தார்.

[youtube-feed feed=1]