காத்மண்டு

தூர்தர்ஷன் தவிர மற்ற இந்தியச் செய்தி சேனல்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.

நேபாள நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது.

இந்திய எல்லையில் சாலை அமைக்கக் கூடாது என நேபாள அரசு இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகரித்தது இந்தியாவினால் தான் என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது.

இந்திய நாட்டு பகுதிகளை தங்கள் நாட்டு வரைபடத்தில் நேபாளம் இணைத்தது.

இதற்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தற்போது நேபாள அரசு தூர்தர்ஷன் தவிர மற்ற இந்தியச் செய்தி தொலைக்காட்சிகளுக்குத் தடை விதித்துள்ளது.

நேபாள அரசுக்கு எதிராகத் தவறான பிரச்சாரங்களை இந்த சேனல்கள் செய்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.