சென்னை:
மிழகத்தில் இன்று ஒரே நாளில் 4231 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. சென்னை மட்டுமின்றி மாவட்டங்களிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  தமிழ்நாட்டில் இன்று 4231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,581ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  8ஆவது நாளாக சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 65 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் நோயில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால், குணமடைந்தோர் மெத்த  எண்ணிக்கை 78,161 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 42,369 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
தற்போது செயலில்உள்ள கொரோனா வழக்குகள்: 46,652
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,728ஆக உயர்ந்துள்ளது.  சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 3015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும்,  வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 145 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் குவைத், ரஷ்யா, சவுதி, ஈரானிலிருந்து வந்த 42 பேரும் அடங்குவர்.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.38 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இன்று உயிரிழந்தோரில் அதிகபட்சமாக, சென்னையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,169 ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக மதுரையில் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்தது.
‘சென்னையில் பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. அந்த குழந்தைக்கு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, 50 வயதிற்கு கீழ் உள்ள 10 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மேலும், 80-70 வயதிற்கு உட்பட்ட 14 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.