ஜூலை 1-ந்தேதி நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் தீ பிடித்த நிலையில், அங்கு பணியில் இருந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் சிக்கி தீக்காயம் அடைந்தனர்.
இந்த கோர விபத்தின்போது, சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள உயிரிழந்த நிலையில், மேலும் 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், என்எல்சி விபத்து தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய என்எல்சி மேலாண் இயக்குனருக்கும், தமிழக தொழிலாளர் நல ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.