சென்னை:
தமிழகத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிகளுக்கான ரூ.12 ஆயிரம் கோடி டெண்டர்கள் மூலம் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது.
கொரோனா பீதிக்கு மத்தியில் தமிழகஅரசு நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தேவையற்றது என்று கூறி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 12 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நெடுஞ்சாலை பணிகள் சரிவரப் போடப்டாததால், சில நாட்களிலேயே வீணாகி வருகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் நெடுஞ்சாலைப் பணிகளுக்காக ரூ.12 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது குறித்து அறப்போர் இயக்கம் மத்திய நிதி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பி உள்ளது.
கொரோனா பாதிப்பால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.12 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை டெண்டர் தேவையற்றது. கொரோனாவுக்கு மத்தியில் ரூ .12000 கோடி சாலை பணிகளுக்காக ஒதுக்கும் செயல், வரி செலுத்துவோர் பணத்தை பெருமளவில் வீணாக்கும் செயலாகும்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் வேண்டும் வலியுறுத்தி உள்ளது.