திருச்சி:
திருச்சியில் எரித்து கொலை செய்யப்பட்ட 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெறவில்லை என்று மாவட்ட எஸ்.பி. தெரிவித்து உள்ளார்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையம் என்னும் பகுதியில் வசித்து வரும் பெரியசாமி என்பவரது மகள்(வயது 14), மாலை நேரத்தில் ஒதுங்க சென்ற நிலையில், திடீரென மாயமானார். அவரது உடல் ஊருக்கு வெளியே முள்ளுக்காட்டில் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை யினர், அந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த னர். இந்த விவகாரம் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், குற்ற வாளிகளை கண்டுபிடிக்க 11 தனிப் படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாகக் திருச்சி மண்டல ஐஜி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சிறுமியின் உடற்கூறாய்வு குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியானது அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனத் தெரிய வந்து இருப்பதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுமி எரித்துக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என்றும் கூறியுள்ளார்.