டெல்லி:
இமயமலையில் உள்ள பனி உருவமாக அமர்ந்துள்ள சிவனை தரிசிக்கும் வகையில், அமர்நாத் பனி லிங்க யாத்திரை வரும் 21ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 10ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான அமர்நாத் குகை கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சிவன் பனிலிங்கமாக காட்சியளிக்கிறார். வருடத்தில் 3 மாதம் மட்டுமே காட்சியளிக்கும் பனி லிங்கத்தை தரிசிக்க உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் கோவிலுக்கு யாத்திரையாக வருவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் இறுதி வாரம் முதல் சுமார் 60 நாட்கள் இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, பனி லிங்கத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டில் 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாகவும், ஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாள் ஒன்றுக்கு 500 பக்தர்கள் மட்டுமே குகைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், யாத்ரிகர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீ அமர்நாத் (Amarnath) ஆலய வாரியம் (SASB) ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 3 வரை யாத்திரையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது, இந்த முறை பயணம் பால்டால் வழியிலிருந்து மட்டுமே யாத்ரிகர்கள் பயணம் இருக்கும் என்றும், யூனியன் பிரதேசத்திற்குள் நுழையும் நபர்களுக்கு கொ ரோனா சோதிப்பதற்கான நிலையான இயக்க நடைமுறைகள் (SOPs) விரும்பும் அமர்நாத் (Amarnath) யாத்ரீகர்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
55 வயதிற்குட்பட்ட பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது இதன் யோசனை. யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு ஆன்லைன் பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமர்நாத் (Amarnath) சன்னதி வாரியம் ஜூலை 5 ம் தேதி அமர்நாத் ஆர்த்தி மற்றும் தரிசனத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.