டெல்லி: யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வில் நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான மானவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்ச்சியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆனால், கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு நடக்கவிருந்த முதல் நிலைத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும் இதுவரை நடக்கவில்லை.
இந் நிலையில் வரும் அக். 4ம் தேதி நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். அதற்காக upsconline.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று UPSC அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel