ண்டிகர்

ரியானா மாநிலத்தில் ஜூலை 27 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அன்று முதல் அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்காக மூடப்பட்டன.

இதுவரை கொரொனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.

இன்று அரியானா மாநில பள்ளிக் கல்வி இயக்குநரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்.

“அரியானா மாநிலத்தில் ஜூலை 1 முதல் ஜூலை 26 வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

எனவே பள்ளிகள் வரும் ஜூலை 27 திங்கள் கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 

இதை அனைத்து கல்வி தொடர்பான அலுவலர்களும் அவசியம் தங்கள் மாவட்டங்களில் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.