சென்னை:
ஆசிரியர்களைக் கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் 50வயதை கடந்த ஆசிரியர்களை அமர்த்தத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஆசிரியர்கள் சங்கம் சார்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் 50வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், அதை மீறி சென்னையில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிக்கு வர விரும்பும் ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில், அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வர வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்து, பணி பட்டியலையும் வெளியிட்டு, பணிக்கு வரா விட்டால் இடை நீக்கம் என்றும் மிரட்டியும் வருகிறது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் விதமாக பணிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 ஷிப்ட்கள் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், போக்குவரத்து வசதி ஏதும் இல்லாத நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை மீறி 50வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் கொரோனா தடுப்பு பணிக்கு வர நிர்ப்ந்திப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆசிரியர் சங்கம் சார்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனுமீது வரும் திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel