பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான். தேசாப் இந்தி படத்தில் மாதுரி தேசித் ஆடிய ஏக் தோ தீன் பாடல் உள்ளிட்ட பிரபல பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்திருக் கிறார். மூன்றுமுறை தேசிய விருது பெற்றிருக்கிறார்.


71 வயதாகும் சரோஜ்கானுக்கு திடீர் முச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மும்பையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் குடும்பத்தினர் அழைத்துச் சென்று சேர்த்தனர். அவருக்கு அவசரமாக கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் தொற்று உறுதியாகவில்லை. இதையடுத்து குடும்பத் தினர் நிம்மதி அடைந்தனர்.
டாக்டர்கள் சரோஜ் கானுக்கு மூச்சு திணறலை குணப்படுத்தி சகஜ நிலைக்கு கொண்டு வருவ தற்கான சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது சரோஜ்கான் வேகமாக குணம் அடைந்து வருகிறார். ஒரு சில நாளில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]