சென்னை: இந்தியாவிலேயே சென்னையில்தான் அதிகளவு சைபர் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சைபர் பாதுகாப்பு நிறுவனமான K7 கம்ப்யூட்டிங் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி, Q4 2019-20 பகுப்பாய்வு காலக்கட்டத்தின்போது இந்த தாக்குதல்களுக்கு சென்னை நகரம் உள்ளாகியுள்ளது.
இந்த ஆய்வினுடைய புள்ளி விபரத்தின்படி, சென்னையில் 42% தாக்குதல்களும், பாட்னாவில் 38% தாக்குதல்களும், பெங்களூரு மற்றும் ஐதராபாத் நகரங்களில் தலா 35% தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன.
Widows XP மற்றும் Windows 7 போன்றவை அதிக ஆபத்திற்கு உள்ளானவையாக இருந்தன. Curveball, Remote Code Execution, phishing attacks போன்றவையும், DOS தாக்குதல்களும் தாக்குதல் தொடர்பாக பிரபலமானவையாக இருந்தன.
மேலும், சிக்கலான USB தாக்குதல்களும் அதிகரித்துள்ளன; இவற்றுள் கிரிப்டோ மைனிங் மால்வேர் என்பதே பிரபலமானதாக இருந்தது என்று K7 ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.