தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சம் பெற்றுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். அதையடுத்து, நாளை மாலை சேலம் செல்கிறார். பின்னர் நாளை மறுதினம்  முதல் 2 நாட்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், மிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 25.06.2020 அன்று கோயம்புத்தூர் மற்றும் 26.06.2020 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், வரும் 25ம் தேதி சேலத்தில் இருந்து கோவை பயணம் மேற்கொள்கிறார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும்,  அத்திக்கடவு அவினாசி திட்டம் குறித்து நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.

அதனைத் தொடர்ந்து வரும் 26ம் தேதி அவர் திருச்சி பயணம் செய்ய உள்ளார் அங்கு காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், வளர்ச்சித் திட்டப்பணிகள், கொரோனாதடுப்பு பணிகள் மற்றும்  குடிமராமத்து பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

தொடந்து முக்கொம்பு கதவணை (Barrage) கட்டும் பணி குறித்துநேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.