புது டெல்லி:
சீன இராணுவம் லடாக்கில் எங்கும் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி பேச்சுக்கு சீன ஊடகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா சீனா எல்லை போரை பற்றி பேசி இருப்பது, இரு நாடுகளுக்கிடையே உள்ள மோதலின் தீவிரத்தை குறைக்க உதவுவதாக அமைந்ததுள்ளது. சீன இராணுவம் லடாக்கில் எங்கும் ஊடுருவ வில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இதனை சீன ஊடகம் வரவேற்றுள்ளது. பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு இரு நாட்டினருக்கும் இடையே பதற்றத்தை தணிக்க உதவும் என்று சீனா ஊடகம் தெரிவித்துள்ளது.
நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் லடாக்கின் எல்லை பிரச்சினை பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் இந்தியாவில் சீன இராணுவம் எங்கும் ஊடுருவவில்லை என்றும், இந்திய நிலப்பரப்பு எதையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பேச்சு., மேலும், இந்திய சீன ராணுவத்தினர் இடையே மோதல்கள் ஏற்படாமல் இருக்கவும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை தணிக்கவும் அவர் எடுத்திருக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பேச்சு இந்திய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா இந்தியாவின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கவில்லை என்றால்….. எல்லையில் ஏன் தேவையில்லாமல் சண்டை நடந்தது என்ற கேள்வியும் எழுகிறது.
ஒருவேளை சீனாவின் எல்லைக்குள் தான் இந்திய ராணுவம் நுழைந்தது என்பதை மோடி ஒப்புக் கொள்கிறாரா? அல்லது சீனாவுடன் தொடர்ந்து மோதல் வேண்டாம் என்று பிரதமர் மோடி இப்படி தெரிவித்துள்ளாரா என்பது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பேச்சை சீன ஊடகங்கள் வெகுவாக பாராட்டிவருகின்றன. இதனைப்பற்றி ஷாங்காயில் உள்ள ஃபூடன் யுனிவர்சிட்டியின் பல்கலைக்கழக பேராசிரியர் லின் மின்வாங்க கூறியிருப்பதாவது: ” இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மேலும் சீனாவை குற்றம்சாட்டாமல் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, இந்தியாவிற்க்கு பாகிஸ்தானுனோ அல்லது மற்ற நாடுகளுடனோ மோதல் ஏற்பட்டால் அது வேறு ஆனால் சீனாவுடன் மோதல் ஏற்படுகின்றது என்றால் அது வேறு, இனி தேவையில்லாமல் இந்தியர்கள் சீனா மீது பழி போட மாட்டார்கள்” என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும் சீனாவின் மற்றொரு ஊடகமான ‘சைனா டைய்லியில்’ காஷ்மீர் மற்றும் லடாக்கின் சுதந்திரத்தைப் பறித்து, அதன் சிறப்பு உரிமையை நீக்கியது தான் அங்கு சண்டை அதிகம் நடக்க காரணம், மேலும் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததுதான் சீனாவின் கோபத்திற்கு காரணம் என்றும் விளக்கியுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி இவ்வாறாக கூறியதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது: பிரதமர் மோடி பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது., சீன ராணுவம் எல்லையில் அத்துமீற முயன்றது உண்மைதான் ஆனால் அவர்கள் அத்துமீற முயன்றபோது நமது இந்திய இராணுவ வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அதனை தடுத்துள்ளனர், இதனால் சீனாவால் இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க முடியவில்லை” இதைத்தான் பிரதமர் மோடி அவ்வாறாக கூறினார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.