கொச்சின்:
ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்பு சிவா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன்னுடைய குடுப்பத்துடன்(3 பேர்) கேரளாவில் இருந்து கனாடா நாட்டிற்கு சென்றார். சிவாவிற்க்கும் அவரது மனைவிக்கும் கனாடவில் உள்ள மான்ட்ரியல் என்ற நகரத்தில் வேளை கிடைத்தது. நன்கு பணம் சம்பாதிக்கவும் சில கடன்களை கட்டி முடிக்கவும் கனாடவிற்க்கு சென்றனர். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையால் அனைத்து வெளிநாட்டவர்களும் சொந்த ஊருக்கு செல்ல ஏங்கியதை போல அவர்களும் ஏங்கினர். அங்கு தான் சோதனை ஆரம்பித்தது.
பல இன்னல்களுக்கு நடுவில் ஜூன் 12-ஆம் தேதி கலடியில் உள்ள தன் சொந்த ஊரை வந்தடைந்த சிவாவின் குடும்பத்தினர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவரும் அவருடைய குடும்பத்தினரும் அடைந்த இன்னல்களை சிவா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் “வந்தே பாராத் மிஸ்ஷன் அண்ட் கொரோனா டூரிசம்” என்ற தலைப்பில் வெளியிட்டார். தான் ஒருவருடமாக கனடாவில் சம்பாரித்த பணத்தை தன்னுடைய இந்த பயணத்தில் செலவழித்தாக சிவா கூறியுள்ளார்.
அந்த பதிவில் அவர் ஒருவருக்கு 42,000 என்ற கணக்கில் டிக்கெட்டை புக் செய்ததாகவும், ஆனால் கொரோனா தொற்று ஆரம்பித்த உடன் அந்த பயணசீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது, பின்பு மத்திய அரசின் வந்தே பாரத் மிஸ்ஷன் அவர்களுக்கு புதிய டிக்கெட் புக் செய்துள்ளது. அப்போது ஏர் இந்தியா (Air india) இவர்களுக்கு ஒருவருக்கு 1,38,000 என்ற கணக்கில் 3 பேருக்கு மொத்தம் 4,14,000 வசூலித்துள்ளது.
கனாடாவில் பொதுவான வேலை செய்யும் எங்களை போன்றோர் இதனை சம்பாதிக்கவே 8 மாதங்கள் ஆகும். மேலும் நான் பாகிஸ்தானிஸ் மற்றும் பிளிப்பினோஸை பார்த்து பெரும் பொறாமை அடைந்தேன், அவர்களிடம் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.
எங்களுக்கு இன்னும் ஆச்சரியம் என்னவென்றால்….. அந்த விமானத்தில் எந்த விதமான இடைவெளியும் இல்லாமல் பயணிகளை அடைத்திருந்தனர். இப்படியிருக்க பயணசீட்டு ஏன் அவ்வளவு விலையுயர்வு என்று எனக்கு புரியவில்லை. மேலும் எங்களுக்கு அளித்த உணவு மிகவும் கொடுமையாக இருந்தது, மேலும் அவர்கள் எங்களுக்கு கொடுத்த மிக்சர் பாக்கெட் ஏதோ தரம் குறைந்த சிப்ஸ் போன்று இருந்தது. அதுமட்டுமில்லாமல் 16 மணி நேர பயணத்தில் எங்களுக்கு வேரு உணவும் இல்லை என்று அவர்கள் அறிவித்தனர்.
நாங்கள் அந்த உணவை சாப்பிடவில்லை, மேலும் எங்களுடைய ஏழு வயது குழந்தையும் பசியுடன் இருந்தது. நாங்கள் யாரும் கழிவறையும் பயன்படுத்தவில்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் எங்களுக்கு அளித்த மாஸ்கும் ஈரமாக இருந்தது.
எப்படியோ அடித்து பிடித்து டெல்லி விமான நிலையத்தை அடைந்து விட்டோம் என்று கருதியபோது அங்கும் நல்ல தண்ணீருக்கும் சாப்பாட்டிற்கும் 7 மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று. டெல்லி விமான நிலையம் இன்னும் கொடுமையாக இருந்தது. யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. மேலும் மக்கள் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு மக்களை கண்காணிக்கும் இராணுவ பணியாளர் ஒருவர் மாஸ்க் கூட இல்லாமல் தான் கையில் வைத்திருந்த ஒரு சப்பாத்தியை அப்படியே நடந்துக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
நாங்கள் உணவு உட்கொண்ட பிறகு அங்கு அமர்ந்திருந்த போது, எங்களுடைய முறை வந்தது அப்போது பணியாளர் ஒருவர் வந்து….. ஒரு பட்டியலை காண்பித்து எங்களுக்கு எந்த உணவு விடுதி வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ள கூறினார். அந்த பட்டியலில் இருந்த எல்லா விடுதிகளும் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. நாங்கள் கேரளா வரைதான் டிக்கெட் புக் செய்துள்ளோம் ஆகையால் எங்களுக்கு உணவு விடுதி வேண்டாம் நாங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினேன் நான். எங்களுடன் இருந்த குழந்தையை பார்த்த அந்த அதிகாரி, சிறிது மனமுவந்து அதற்கு உதவி செய்தார். மேலும் எங்களைப் போலவே ஆந்திராவிற்க்கு செல்லும் ஒருவர் நானும் என் வீட்டிற்கு செல்ல வேண்டும், நான் ஒரு இருதய நோயாளி என்று தன்னிடம் இருந்த மருத்துவ கோப்புகளையும் காண்பித்தார் ஆனால் அதிகாரி அதற்கு அவரை அனுமதிக்கவில்லை. நாங்கள் அங்கிருந்து கிளம்பிய போதும்கூட அவர் அதற்காகப் போராடிக் கொண்டே தான் இருந்தார் அதனைக் கண்ட எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
மேலும் அங்கு 12 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் காத்திருந்த பிறகே நாங்கள் கேரளாவிற்கு விமானம் ஏறினோம். நாங்கள் அங்கு இருந்த அவ்வளவு நேரமும் அதிக மக்கள் நடமாடிக் கொண்டுதான் இருந்தனர். அங்கு சமூக இடைவெளியும் இல்லை, எவரும் வந்து, அவ்வளவு நேரத்தில் கிருமினாசினியும் தெளிக்கவில்லை. நாங்கள் கேரள விமான நிலையத்தை அடைந்தபோது, எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது மக்கள் தகுந்த சமூக இடைவெளியை கடைப்பிடித்து அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு விமானநிலையத்திற்கு வருபவர்களை எல்லாம் சரியாக கண்காணித்து தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுகிறது.
நாங்கள் கேரள விமான நிலையத்திலிருந்து 45 நிமிடத்தில் வெளியில் வந்து ஒரு டாக்ஸியில் ஏறினோம், எங்களை தனிமையில் இருக்கும் படி அறிவுறுத்தி அனுப்பினார். நாங்கள் வீட்டிற்கு வந்ததும் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்த பசியில் நன்கு சாப்பிட்டோம் அதுவரை எங்களுக்கு அப்படி ஒரு சுவையான உணவு கிடைத்ததே இல்லை என்பதை உணர்ந்தேன். என்று சிவா தன்னுடைய பதிவில் கூறியிருந்தார். இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் அரசு மக்களை இவ்வளவு அலைகழிப்பது சரியில்லை என்றும் அவர் கூறியிருந்தார். நமது ஜனநாயகம் எந்த நிலையில் உள்ளது என்பதை சிவாவுடைய இந்த பதிவு உணர்த்தியுள்ளது.