சென்னை: சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பணியாற்றும் மற்றவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
அயனாவரம் காவல் நிலையத்தில் 4 உதவி ஆய்வாளர்கள் உள்பட 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந் நிலையில் தற்போது காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து மற்ற போலீசாரும் பணிக்கு வர அச்சம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சென்னை ஆதம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மாம்பலம் இன்ஸ்பெக்டர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது காவலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]