இம்பால்:

ணிப்பூர் மாநில பாஜக  எம்எல்ஏக்கள் அணி தாவிய நிலையில்,  மாநில முதல்வர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.  கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிப்பூரில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைத்த பாஜகவுக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்களில் 9 பேர் திடீரென ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால், மணிப்பூர் சட்ட மன்றத்தில் பாஜக மெஜாரிட்டியை இழந்து,  ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் , பாஜகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் தற்போது கட்சித்தாவலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பாஜகவை விட்டு பிரிந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். மேலும் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிய 6 சுயேச்சைகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதன் காரணமாக  மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் முயற்சியில்  காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ இபோபி சிங் இறங்கியுள்ளார்.

இதையடுத்து மாநில பாஜக முதல்வரான பைரேன் சிங், கவர்னரை சந்தித்து ராஜினாமா கொடுக்கப்போவதாக  அறிவித்து உள்ளார்.


மணிப்பூரில் மொத்தம் உள்ள 52 எம்எல்ஏக்களி, காங்கிரஸ் கட்சிக்கு 29 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.  இதனால், அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகி உள்ளது.