‘லைசன்ஸ்’ இல்லாமல் பாம்பு பிடித்தால் 3 ஆண்டு ஜெயில்..
காடும், காடு சார்ந்த இடமும் கேரளாவில் அதிகம். இதனால் பாம்புகள் நடமாட்டம் அதிகம்.பாம்பு கடித்து இறப்போரும் ஜாஸ்தி.
இவ்வாறு பலியாவோரில் பாம்பாட்டிகள் எண்ணிக்கை அதிகம் என்பதால், பாம்பு பிடிக்க இனி ‘லைசன்ஸ்’’ கட்டாயம் வாங்க வேண்டும் எனச் சட்டம் கொண்டுவரக் கேரளா முடிவு செய்துள்ளது.
பாம்பாட்டிகள், மாவட்ட வன அலுவலகத்தில் லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்தால், அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்
இந்த தேர்வில் பாதுகாப்பான முறையில் பாம்பு பிடிப்பது குறித்து, பாம்பாட்டிகளுக்குச் செயல்முறை விளக்கமும், பயிற்சியும் அளிக்கப்படும்.
கேரள வனத்துறையில், பாதுகாப்பான முறையில் பாம்பு பிடிக்கப் பயிற்சி பெற்ற நூறு வன ஊழியர்கள் உள்ளனர். அவர்கள், லைசன்ஸ் கேட்டு விண்ணப்பம் செய்வோருக்கு , பாம்பு பிடிக்கப் பயிற்சி கொடுப்பார்கள்.
லைசன்ஸ் இல்லாமல் பாம்பு பிடித்தால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க , கேரள அரசின் புதிய சட்டத்தில் வகை செய்யப்படுகிறது.
– பா. பாரதி