மும்பை
பாங்க் ஆஃப் இந்தியாவில் இருந்து ரூல்.67 கோடி கடன மோசடி செய்ததாக பாஜக தலைவர் மோகித் கம்போஜ் மற்றும் நால்வர் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது.

பாஜகவின் யுவ மோர்ச்சா எனப்படும் இளைஞர் அணிப்பிரிவின் தலைவராக மோகித் கம்போஜ் பதவி வகித்து வருகிறார். இவர் ஏவியன் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பணி புரிந்து வந்தார். இந்த நிறுவனம் கைவினைப் பொருட்கள், தங்க நகைகள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து துபாய், சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.
இந்த நிறுவனத்தை தவிர கேபிஜெ ஹோட்டல் கோவா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தையும் கம்போஜ் நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனங்கள் பாங்க் ஆஃப் இந்தியாவில் இருந்து ரூ.67 கோடி கடனாகப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி சிபிஐ கம்போஜ் மற்றும் உள்ள நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தி உள்ளது.
அதன் அடிப்படையில் கம்போஜ், ஜிதேந்திர குல்ஷன் கபூர், நரேஷ் மதன்ஜி கபூர், சித்தாந்த் பாக்லா, மற்றும் இர்தேஷ் மிஸ்ரா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. இதில் நரேஷ் மதன்ஜி கபூர் தற்போது உயிருடன் இல்லை. மேலும் இந்த வழக்கில் ஏவிய ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கேபிஜீ ஹோட்டல் கோவா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
மோகித் கம்போஜ், “கடந்த 2018 ஆம் வருடம் நிறுவனம் வங்கியுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. அதன் அடிப்படையில் ரூ.30 கோடி ரூபாய் வழஙகப்ட்டது. வங்கி எங்களுக்கு இதையொட்டி நிலுவைத் தொகையில்லா சான்றிதழ் வழங்கியது. தற்போது திடீரென வழக்குப பதியபட்டுள்ளது.
இந்த வழக்கு சில அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்பட்டுள்ளது அத்துடன் இதில் ஒரு சில தனிப்பட்ட போட்டியின் பிரச்சினைகளும் உள்ளன். நான் சிபி ஐ விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]